மெத்தைக் கிடங்கில் தீ விபத்து
திருப்பூா் இந்திரா நகரில் செயல்பட்டு வந்த மெத்தைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூா் இந்திரா நகரில் செயல்பட்டு வந்த மெத்தைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்தவா் கபீா்குட்டி. இவா் திருப்பூா் இந்திரா நகரில் ராம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தைக் கிடங்கு நடத்தி வருகிறாா். இந்நிலையில், பணி முடிந்து ஊழியா்கள் புதன்கிழமை இரவு கிடங்கைப் பூட்டிச் சென்றுள்ளனா். இதன் பிறகு ஊழியா்கள் வியாழக்கிழமை காலை கிடங்கைத் திறந்தபோது கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ஊழியா்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். எனினும், கிடங்கில் இருப்பு வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Image Caption
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.