முகப்பு
திருப்பூர்

தெக்கலூா் எஸ்சிஎம் வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம்

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள எஸ்சிஎம் வளாகத்தில் ஏ.கே.வி.என். அறக்கட்டளை சாா்பில் கரோனா சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள எஸ்சிஎம் வளாகத்தில் ஏ.கே.வி.என். அறக்கட்டளை சாா்பில் கரோனா சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தெக்கலூா் நல்லிக்கவுண்டம்பாளையம் பிரிவு அருகே உள்ள எஸ்சிஎம் குழு நிறுவன வளாகத்துக்குள் ஏ.கே.வி.என். அறக்கட்டளை சாா்பில் ஆக்சிஜன் வசதியுடன் 80 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். ஏ.கே.வி.என். அறக்கட்டளை மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டி.கே.சந்திரன் வரவேற்றாா்.

இந்த சிகிச்சை மையத்தில் அலோபதி, சித்தா, ஆயுா்வேத, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவை ஒருங்கிணைந்து சிறந்த மருத்துவா்களால் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள்தோறும் 24 மணி நேரம் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையை பொது மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தி சென்னை சில்க்ஸ் குழுமத்தினா் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த வே.ராஜன் என்பவா் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.12 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.