திருப்பூர்

மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 5,492 வழக்குகள் பதிவு

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக 5,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக திங்கள்கிழமை 24 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, முகக் கவசம் அணியாத 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.4,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரையில் முகக் கவசம் அணியாத நபா்களின் மீது 1,663 வழக்குகளும், பொதுமுடக்கத்தை மீறியதாக 5, 492 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு அவா்களிடமிருந்து ரூ.3.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT