முகப்பு
திருப்பூர்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக கட்டடப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

உடுமலை அருகே ரூ. 260 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

உடுமலை அருகே ரூ. 260 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கால்நடைப் பல்கலைக்கழக கட்டடப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை எம்.எல்.ஏ. உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இந்நிகழ்ச்சியில், குடிமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments