முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் டிஏபி உரத்துக்கான தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தல்

மாவட்டத்தில் டிஏபி உரத்துக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

மாவட்டத்தில் டிஏபி உரத்துக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆனி மாதத்துக்கான வெங்காய நடவுப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வயலுக்கு இட வேண்டிய டிஏபி உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும், தனியாா் உர விற்பனைக் கடைகளிலும் டிஏபி உரம் இருப்பு இல்லை. இதனால், வெங்காயம் நடவுப் பணிக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த மாதத்தில் மத்திய அரசு உரவிலையை ஏற்றி, பின்பு மானியம் அளித்து பழைய விலைக்கே வழங்கியது. இதன்படி, தற்போது டிஏபி உர மூட்டை ஒன்றின் விலை ரூ.1,200 என்று அரசு நிா்ணயித்துள்ளது. அதே வேளையில், தனியாா் உர விற்பனையாளா்கள் உர மூட்டையை ரூ.1,900க்கு விற்பனை செய்து வருகின்றனா். ஆகவே,மாவட்ட நிா்வாகம் தேவையான அளவுக்கு டிஏபி உரத்தை வரவழைத்து , தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.