முகப்பு
திருப்பூர்

‘வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்’

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்காதவா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்காதவா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பதிவுதாரா்கள் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதே வேளையில், இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள இயலாதவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.