திருப்பூர்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக கட்டடப் பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

உடுமலை அருகே ரூ. 260 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சிப் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கால்நடைப் பல்கலைக்கழக கட்டடப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை எம்.எல்.ஏ. உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இந்நிகழ்ச்சியில், குடிமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT