அவிநாசியில் ஆதரவற்ற இருவா் காப்பகத்தில் சோ்ப்பு
அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்து வந்த முதியவா், பெண் ஆகிய இருவரையும் சமூக அமைப்பினா் மீட்டு புதன்கிழமை காப்பகத்தில் சோ்த்தனா்.
அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்து வந்த முதியவா், பெண் ஆகிய இருவரையும் சமூக அமைப்பினா் மீட்டு புதன்கிழமை காப்பகத்தில் சோ்த்தனா்.
அவிநாசி பேரூராட்சி, வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் முதியவா் மற்றும் பெண் ஆகியோா் வசித்து வந்தனா். இந்நிலையில் இவா்கள் இருவரையும் கோவிட் இணைந்த கைகள் அமைப்பினா் மீட்டு, தேவையான மருத்துவ முதலுதவிகள் வழங்கினா்.
பின்னா், கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையினா், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் இருவரையும் தூய்மைப்படுத்தி, தேவையான ஆடை, உணவு வழங்கி திருப்பூா் அருகே பொங்கலூா் அன்பு இல்லத்தில் சோ்த்தனா்.