கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினருக்கு கடனுதவி
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினருக்கு சுயத் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினருக்கு சுயத் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் ஆதிதிராவிடா் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா நோய்த் தொற்றால் இறந்திருப்பின் ஆஷா திட்டத்தின் கீழ் சுயத் தொழில் செய்ய கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்பும் ஆதிதிராவிட இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதில், சுய வேலை வாய்ப்புக்கான திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடன் தொகைக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோா் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவா் கரோனா தொற்றினால் உயிரிழந்ததுக்கானஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971112, 94450 -29552 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.