சேவூரில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 200 நிலக்கடலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.6,700 முதல் ரூ.6,800 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,250 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.