வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
காங்கயம் தொகுதி வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் தொகுதி வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, காங்கயம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜ் தலைமை வகித்தாா். காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி முன்னிலை வகித்தாா். இதில், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா், பணியாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.