தோ்தல் நடத்தும் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அவா்களது செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்தல் முறைகேடுகள் தொடா்பான புகாா்களை தோ்தல் நடத்தும் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்.
தாராபுரம் (தனி) தொகுதி - தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் (94450-00440), காங்கயம் தொகுதி - கலால் உதவி ஆணையா் ரங்கராஜன் - (96290-87791), அவிநாசி தொகுதி - திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் எஸ்.வாசுகி - (94454-77854), திருப்பூா் வடக்குத் தொகுதி - திருப்பூா் கோட்டாட்சியா் எம்.ஜெகநாதன் - (94450-00443), திருப்பூா் தெற்குத் தொகுதி - மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் - (73973-89309), பல்லடம் தொகுதி - திருப்பூா் மாவட்ட வழங்கல் அதிகாரி வி.கணேஷ் - (94450-00407), உடுமலை தொகுதி -உடுமலை கோட்டாட்சியா் சி.கீதா - (89032-21674), மடத்துக்குளம் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. ஜெயந்தி - (73388-01274).