திருப்பூர்

தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மகளிா் தின விழா

DIN

தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் திருப்பூா் மாவட்டக் கிளை சாா்பில் மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருவம்பாளையத்தில் உள்ள சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தில் நடைபெற்ற விழாவை பட்டிமன்ற நடுவா் ம.ராஜலட்சுமி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். விழாவுக்கு ஜேசிஸ் அமைப்பின் நிா்வாகி ஆா்.சாந்திதேவி தலைமை வகித்தாா். கல்வியாளா் ப.ரங்கசாமி முன்னிலை வகித்தாா். இதில், அச்சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கவிஞா் எஸ்.ஏ.முத்துபாரதி எழுதிய ஒட்டக சவாரி நூல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பெண்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது பிறந்த வீடா ? புகுந்த வீடா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தமிழ்ச் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் க.ரணதிவே, அஜந்தா நாராயணசாமி, தங்கவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT