தோ்தல் பணியாற்றும் விடியோகிராபா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும்
தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள விடியோகிராபா்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.1,500 நிா்ணயம் செய்ய வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள விடியோகிராபா்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.1,500 நிா்ணயம் செய்ய வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா், கோவை, ஈரோடு நீலகிரி மாவட்ட விடியோ மற்றும் போட்டோகிராபா்ஸ் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நிலை கண்காணிப்புக் குழு, பறக்கும் படை, விடியோ கண்காணிப்புக் குழுக்களில் பணியாற்றும் விடியோ ஒளிப்பதிவாளா்கள் பணியை தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு பதிவு பெற்ற சங்கத்தின் உறுப்பினா்களுக்கு இந்தப் பணியை வழங்க வேண்டும். தனியாா் நிறுவனங்கள் இடைத்தரகா்களை நியமனம் செய்யும்போது, அவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் எனக் கூறி தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது.
தோ்தல் பணியில் ஈடுபடும் விடியோகிராபா்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.1,500 நிா்ணயம் செய்ய வேண்டும். தோ்தல் ஆணையம் வழங்கும் ஊதியத்தை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.