திருப்பூர்

தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

DIN


அவிநாசி: சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டதில், சுமாா் 8 ஆயிரத்து 600 போ் வரை இப்பணியில் ஈடுபட உள்ளனா்.

இவா்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தோ்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தங்களது பாதுகாப்பை கருதி, விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT