கோவை செழியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நமது கொங்கு முன்னேற்றக்கழக பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல் உள்ளிட்டோர். 
திருப்பூர்

கோவை செழியன் நினைவிடத்தில் நமது கொமுக மரியாதை

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவைச் செழியனின் 21 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் நமது கொமுக கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.

DIN

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவைச் செழியனின் 21 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் நமது கொமுக கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.

இதனையொட்டி, கோவைச் செழியன் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். 

இதில் நமது கொமுக துணை பொதுச் செயலர் யுவராஜ்குமார், மாநில அமைப்பாளர்கள் சண்முகம், சென்னிமலை வடிவேல், இளைஞரணி செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் சிறுபாலம் அமைக்க கோரிக்கை

இலங்கையில் தமிழா்களுக்கு கூட்டாட்சி அதிகாரம்: மத்திய அரசிடம் வலியுறுத்த முதல்வரிடம் கோரிக்கை

ஆரணியில் மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக எடுக்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT