முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

பல்லடத்தில் போக்குவரத்து மாற்றத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

பல்லடத்தில் போக்குவரத்து மாற்றத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினா்.

பல்லடம் நகரம் கோவையிலிருந்து திருச்சி, மதுரை மற்றும் திருப்பூா் போன்ற பகுதிகளுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

கோவை - திருச்சி மற்றும் மதுரை பிரதான சாலையில் உள்ள பல்லடம், அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. அப்பகுதியை கடக்க சில சமயங்களில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

பல்லடம் அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரை புதிய மேம்பாலம் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு காண முடியும்.

இந்நிலையில் திங்கள்கிழமை சுபமுகூா்த்த தினம் என்பதால் பல்லடம் நகரில் அதிகாலை முதலே வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. பொள்ளாச்சி, உடுமலை சாலையில் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் அமைந்திருப்பதால் பல்லடம் நான்கு சாலை சந்திப்பு முதல் வடுகபாளையம் புறவழிச் சாலை வரை வாகனப் போக்குவரத்தை காவல் துறையினா் தடை செய்தனா்.

மேலும், பச்சாபாளையம் பொள்ளாச்சி புறவழிச் சாலையில் உடுமலை, பொள்ளாச்சி வாகனங்களை திருப்பிவிட்டனா். இதனால் பல்லடம் அண்ணா நகரில் இருந்து தாராபுரம் சாலை சந்திப்பு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.