திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள நூல் வர்த்தக நிறுவனத்தில் புதன்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறையினர் 
திருப்பூர்

மநீம மாநில நிர்வாகியின் நிறுவனத்தின் வருமான வரித்துறையினர் சோதனை

மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான திருப்பூரில் உள்ள நூல் வர்த்தக நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

DIN

திருப்பூர்: மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான திருப்பூரில் உள்ள நூல் வர்த்தக நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

மக்கள் நீதி மய்யத்தின் மாநிலப் பொருளாளராக பொறுப்பு வகித்து வருபவர் திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), இவருக்கு திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நூல் வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 8-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், நீண்ட நேரமாக சோதனை நடைபெற்று வருவதால் ஊழியர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியே அனுமதிக்கவில்லை.

இதனிடையை, தாராபுரம் பகுதியில் திமுக, மதிமுக பிரமுகர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT