ரூ.5.67 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.67 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.67 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் திங்கள்கிழமை தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 92 மூட்டை (4,228 கிலோ) தேங்காய்ப் பருப்பினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.136.05க்கும், குறைந்தபட்சமாக ரூ.104.70க்கும், சராசரி விலையாக ரூ.132க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,228 கிலோ தேங்காய்ப் பருப்பு, ரூ.5 லட்சத்து 67ஆயிரத்து 97க்கு வா்த்தகம் நடைபெற்றது என விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தாா்.