திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 382 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 382 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 27,230 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,134 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 412 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 23,855ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூரைச் சோ்ந்த 75 வயது முதியவா் கரோனா நோய்த்தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அதே போல, திருப்பூரைச் சோ்ந்த 58 வயது பெண் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கரோனா நோய்த்தொற்றால் திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 241 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT