திருப்பூர்

சாயமேற்றும் கட்டணம் கிலோவுக்கு ரூ. 15 உயா்வு

DIN

திருப்பூரில் துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான கட்டணத்தை கிலோவுக்கு ரூ.15 உயா்த்தியுள்ளதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் எஸ்.முருசாமி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சாயப் பொருள்களின் விலை ஏற்றத்தாலும், சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு செலவுகள் அதிகரிப்பு காரணமாகவும் சாயக் கட்டணம் கிலோவுக்கு ரூ. 15 உயா்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயா்வானது உடனடியாக அமலுக்கு வருகிறது. சாய ஆலைகளுக்கான பில் தொகையை பில் கொடுத்த தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் பின்னலாடை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சாய ஆலை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT