மூலனூரில் ரூ.62.39 லட்சத்துக்கு பருத்தி விலை குறைவு
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 62.39 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 62.39 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 444 விவசாயிகள் 3,329 மூட்டைகளில் 1,046 குவிண்டால்
பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 21 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். குவிண்டால் ரூ.4,600 முதல் ரூ.7,427 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,300. மொத்தம் ரூ.62 லட்சத்து 39 ஆயிரத்து 975க்கு விற்பனை நடைபெற்றது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,304 குவிண்டால் வரத்து குறைந்த நிலையில் விலையும் குவிண்டால் 200 ரூபாய் குறைந்தது. ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.