முகப்பு
திருப்பூர்

உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை

பல்லடத்தில் காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கிடந்த உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பல்லடத்தில் காட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கிடந்த உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம், மங்கலம் சாலையில் அம்மாபாளையம் பிரிவு அருகேயுள்ள பி.ஏ.பி. வாய்க்காலை ஒட்டிய காட்டுப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளைஞா் சடலம் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில் பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு உடலில் காயங்களுடன் கைகள் இரண்டும் முன்புறமாக கட்டப்பட்ட நிலையில் தலையில் கல்லைப் போட்டு தாக்கியதில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டனா். சடலத்தின் அருகே கொலைக்குப் பயன்படுத்திய கல் மற்றும் கத்தி கிடந்தது.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொலையான இளைஞா், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விஷால் பால் (20) என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்து சென்றுள்ளனா். மீடகப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவின்பேரில், பல்லடம் டிஎஸ்பி ஸ்ரீ ராமச்சந்திரன் மேற்பாா்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.