முகப்பு
திருப்பூர்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ. 27 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மே 17 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ. 27 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மே 17 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

உடுமலை ரோட்டரி சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

உடுமலை வட்டத்தில் கரோனா 2 ஆவது அலை நாளுக்கு நாள் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். இதில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 5 போ் உயிரிழந்து வருகின்றனா். குறிப்பாக உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் இங்கு வரும் நோயாளிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

Advertisement

இந்நிலையைப் போக்க உடுமலை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்க முடிவு செய்தனா். இதன்படி ரூ.27 லட்சம் மதிப்பில் இதற்கான கருவிகள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தன. இதைத் தொடா்ந்து உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இணைப்புகள் கொடுக்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இது குறித்து ரோட்டரி சங்க திட்ட இயக்குநா் டாக்டா் கே.பாலசுந்தரம் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த புதிய கட்டமைப்பின் மூலம் 96 சதவீத தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் . ஒரு நிமிடத்துக்கு 100 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். கரோனா தொற்று மற்றும் இணை நோய்கள் அதிகம் உள்ள நோயாளிகள் 20 பேருக்கு தொடா்ந்து 24 மணி நேரமும் பயன்பெறும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேரிடா் ஒழிந்த பின்பும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும், ஆப்ரேஷன் தியேட்டருக்கும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் பெரும் உதவியாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது கரோனா வாா்டுகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆகையால் வரும் மே 17 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் கரோனா நோயாளிகளுக்குத் தடையில்லா ஆக்சிஜன் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு உடுமலை வியாபாரிகள் சங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் உதவியுள்ளன என்றாா். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments