முகப்பு
திருப்பூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் பேருந்து வசதி

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் பேருந்து வசதியை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்திக் கொடுத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் பேருந்து வசதியை தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்திக் கொடுத்தனா்.

வெள்ளக்கோவில் பகுதியில் முழு பொதுமுடக்க காலத்திலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் வழங்கிய பேருந்தில் ரூ.5 லட்சம் செலவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நிழல்கள் அறக்கட்டளை, நூற்பாலைகள் சங்கத்தினா் பேருந்தில் பொருத்தி, வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.