திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 1,823 பேருக்கு கரோனா: 12 போ் பலி

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,823 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 56,354 ஆக அதிகரித்துள்ளது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில்16,894 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 976 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39,035 ஆக அதிகரித்துள்ளது.

12 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 29, 54 வயதுடைய பெண்கள், 68 வயது மூதாட்டி, 40 , 53, 58 வயதுடைய ஆண்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனா். அதே போல, கோவை அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது மூதாட்டி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி உள்பட 12 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 425 போ் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளக்கோவில், முத்தூரில்...

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை கிடைத்தன. இவற்றில் வெள்ளக்கோவில், குட்டக்காட்டுபுதூா், கச்சேரிவலசு, நாகமநாயக்கன்பட்டி, காவலிபாளையம், ஆண்டிபாளையம், ஓலப்பாளையம் ,சங்கன்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 30 போ், முத்தூா் காந்தி நகா், தொட்டியபாளையம், கணேசபுரம், சக்கரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT