திருப்பூர்

தேசிய நெடுஞ்சாலையில் 11 கி.மீ தூரத்துக்கு மரக்கன்றுகள் நடும் பணி

DIN

வெள்ளக்கோவில் தொழில் துறையினர், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், நிழல்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த துவக்க நிகழ்ச்சிக்கு தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை வகித்தார். மருத்துவர் சத்தியமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் வெங்கடசுப்பு, நிழல்கள் அறக்கட்டளை செயலாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அண்மையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்ற போது நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. 

அவற்றுக்கு ஈடாக முதல் கட்டமாக வெள்ளக்கோவில் - ஓலப்பாளையம் வரை 11 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT