வெள்ளச் சேதம்: திருவாரூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்களில் ஏற்பட்ட பாதிப்பை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்களில் ஏற்பட்ட பாதிப்பை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்துவரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இது குறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை, அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த அவர், திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளில் பயிர் சேதத்தை பார்வையிட்டார்.