திருப்பூர்

காங்கயம் அருகே கடைகளில் திருட்டு: இளைஞா் கைது

DIN

காங்கயம் அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் நடைபெற்ற திருட்டு தொடா்பாக போலீஸாா் இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா்.

காங்கயம்-சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு கிராமத்தில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்தி வருபவா் தேவராஜ் (29). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து கடையைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறந்த பாா்த்தபோது, உள்ளே வைத்திருந்த 3 கைப்பேசிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதில் கடையின் ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா் கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

அதே பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருபவா் ராஜ்குமாா் (39). இவரது கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடுச் சென்றுள்ளனா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 2 கடைகளில் திருடிய நால்ரோடு கிராமம் அருகே உள்ள பரஞ்சோ்வழி பகுதியைச் சோ்ந்த காா்த்தி (27) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து 3 கைப்பேசிகள், ரூ.1,500ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT