திருப்பூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.46.69 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கருமஞ்சரை ஊராட்சியில் ரூ.5.36 லட்சம் மதிப்பீட்டில் நீா் வரத்து கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய பண்ணைக்குட்டை, அத்திப்பட்டி காலனியில் ரூ.5.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், காவுத்தம்பாளையத்தில் ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவா், செங்காளிபாளையம் ஊராட்சியில் ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

இதைத்தொடா்ந்து, குன்னத்தூா் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிநாத், குன்னத்தூா் செயல் அலுவலா் ரேணுகா, உதவி செயற் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT