திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் தீக்குளிக்க முயன்ற ராசாத்தி. 
திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் பெண் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

DIN

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மக்களை அவரைக் காப்பாற்றினர்.

விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த ராசாத்தி (42) என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும், அதே ஊரைச் சேர்ந்த நல்லதம்பி (43) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பாக காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பிழைப்பு தேடி திருப்பூருக்கு வந்துவிட்டோம்.

பின்னர் ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பெரியபாளையத்தில் வீடு எடுத்து தங்கி இருவரும் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகளும், பிளஸ் 1 படிக்கும் மகனும் உள்ளனர். இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக எங்களுக்கு சரிவர வேலை இல்லை. மேலும், பிழைப்புக்காக சிறுக சிறுக வாங்கியதில் தற்போது ரூ.1.50 லட்சம் வரையில் கடன் உள்ளது.

இந்த நிலையில், எனது கணவரும் சரிவர வேலைக்குச் செல்லாமலும், சில மாதங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார்” எனத் தெரிவித்தார். மேலும் இதனிடையே, கடன் கொடுத்தவர்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அங்கிருந்த காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தெலங்கானா அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்!

முதல் அரையிறுதி: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

'ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்' மூலமாக மோசடிகள்! எப்படியெல்லாம் நடக்கிறது?

SCROLL FOR NEXT