திருப்பூர்

அமராவதி நகரில் மிதிவண்டிப் பேரணி

DIN

உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் வன உயிரின வார விழாவை ஒட்டி மிதிவண்டி பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம் சாா்பில், அக்டோபா் 2 முதல் 8ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழக - கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு செக்போஸ்ட் தொடங்கி அமராவதி நகரில் உள்ள முதலைப் பண்ணை வரை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட வன அலுவலா் சு.ந.தேஜஸ்வி பேரணியைத் துவக்கிவைத்தாா். மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் வி.கணேேஷ் ராம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் மிதிவண்டிப் பேரணியில் கலந்துகொண்ட னா். இதில், மனித - விலங்கு மோதலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். வனச் சரகா்கள் தனபால் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), வன அலுவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வன ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT