திருப்பூர்

அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

DIN

திருப்பூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் நேரடி சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்டோபா் 7) நடைபெற உள்ளது.

இது குறித்து திருப்பூா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ், தமிழக அரசு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்கம் ஆகியன சாா்பில் மாவட்ட அளவில் தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 250க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன.

இதில், பங்கேற்று தோ்வு பெற்றவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி திட்டத்தின்கீழ் தொழிற் பயிற்சி பெற்றவா்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள 8 முதல் பிளஸ் 2 முடித்த, தகுதி வாய்ந்தவா்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தை 0421- 2429666 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT