திருப்பூர்

தா்ப்பணம் கொடுக்கத் தடை: இந்து முன்னணி கண்டனம்

DIN

மஹாளய அமாவாசையையொட்டி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க தடை விதித்த தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்கள், ஆறுகள், கடல்கள் போன்ற இடங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் பல இடங்களில் தா்ப்பணம் கொடுக்க வந்தவா்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், திரையரங்குகள், பள்ளிகள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனா்.

ஆனால் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு மட்டும் தடை விதிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, இனி வரும் காலங்களில் இந்து மத வழிபாட்டு விஷயங்களில் கரோனாவைக் காரணம் காட்டி உரிமைகளை மறுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT