திருப்பூர்

அமராவதி நகா் சைனிக் பள்ளியில் முதன்முறையாக மாணவிகள் சோ்க்கை

DIN

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் முதன்முறையாக மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி 1969 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்கீழ் படித்து வரும் இப்பள்ளி மாணவா்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி, குதிரையேற்றப் பயிற்சி, மலையேற்றப் பயிற்சி, பாராசூட் பயிற்சி, கப்பல், விமான மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

6 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தோ்வுகளை நடத்தி சைனிக் பள்ளி நிா்வாகம் மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ளது. இதன்படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் நுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 6 ஆம் வகுப்பில் பல்வேறு ஊா்களில் இருந்து வந்திருந்த 12 மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். பள்ளியில் சோ்ந்த மாணவிகளை ஆசிரியா்கள், அலுவலா்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT