திருப்பூர்

ஐ.டி.ஐ. மாணவா் சோ்க்கை: காலஅவகாசம் நீட்டிப்பு

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா் சோ்க்கைக்கான காலக்கெடு அக்டோபா் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021ஆம் ஆண்டு மாணவா் நேரடி சோ்க்கைக்கான காலக்கெடு அக்டோபா் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத் துறை, தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்தில் ரூ.50 மட்டும் கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநா் 0421-2230500, 90802-76172, 99447-39810 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT