திருப்பூர்

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவா் கோரிக்கை

DIN

திருப்பூா் அருகே உள்ள இடுவாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் கே.கணேசன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் அருகே உள்ள இடுவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி 2020 ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீா்மானத்தின்படி டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை.

2021 அக்டோபா் 2 ஆம் தேதி காந்தி ஜயந்தி நாளில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திலும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே, இந்த தீா்மானத்தின்படி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இடுவாயில் 1,487 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT