முகப்பு
திருப்பூர்

காங்கயம், வெள்ளக்கோவிலில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 16) நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 16) நடைபெறவுள்ளது.

காங்கயம் வட்டாரத்துக்கு உள்பட்ட சாவடிப்பாளையம், நத்தக்காடையூா், பாப்பினி, காங்கயம் நகரம், பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், சிவன்மலை, நால்ரோடு, கஸ்பா பழையகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சிறு மருத்துவமனைகள், காங்கயம் அரசு மருத்துவமனையிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

வெள்ளக்கோவிலில்...

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,380 போ், கல்லமடை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 600, தண்ணீா்பந்தல் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 670, முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 320, ஊடையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400, தென்னங்கரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 400 போ் என 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →