உடுமலை அருகேயுள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி
உடுமலை அருகே உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
உடுமலை அருகே உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது ஏழுமலையான் வெங்கடாசலபதி கோயில். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 7 கிலோ மீட்டா் நடந்து சென்று பெருமாளை வழிபட்டு வருவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக வனப் பகுதிக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.
Advertisement
இது குறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறு கையில், ‘தமிழக அரசு வழிகாட்டுதலின்படி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.