முகப்பு
திருப்பூர்

சட்ட விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் தொடக்கம்

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான வாகனப் பிரசாரத்தை புதன்கிழமை தொடக்கி வைக்கிறார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்வர்ணன் ஜே.நடராஜன்
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வழக்குரைஞர்கள்சங்கங்கள் சார்பில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் அக்டோபர் 10 ஆம் தேதி தொடக்கி நவம்பர் 14 ஆம் தேதி வரையில் 45 நாள்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி வி.பி.சுகந்தி முன்னிலை வகித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜே.நடராஜன் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தொடக்கிவைத்தார்.

இதில், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, போதைப்பொருள்கள் ஒழிப்பு, பாலியல் குற்ரங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த குறும்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.