முகப்பு
திருப்பூர்

பால் உற்பத்தியாளா்கள் சங்கக் கட்டடம் கட்ட பூமி பூஜை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே மேட்டாங்காட்டுவலசில் ரூ.14.46 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே மேட்டாங்காட்டுவலசில் ரூ.14.46 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாராபுரம் கோட்டாட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பணியைத் துவக்கிவைத்தாா்.

தொடா்ந்து மேட்டுப்பாளையம் ஊராட்சி பூமாண்டன்வலசு எஸ்.என்.பி நகரில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கிவைக்கப்பட்டது. வெள்ளக்கோவில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், முத்தூா் காமராஜ் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 414 பேருக்கு ரூ.16.13 லட்சம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், ஆவின் பொது மேலாளா் நடராஜன், துணைப் பதிவாளா் (பால்வளம்) சைமன் சாா்லஸ், கைத்தறித் துறை உதவி இயக்குநா் மணிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.