முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு கரோனா நிதியுதவி

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா்களை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் கரோனா நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா்களை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் கரோனா நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி கரோனா நோய்த் தொற்றால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு

ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் கரோனா நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதேபோல, பெற்றோா்களை இழந்து உறவினா்களின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்

வீதம் 18 வயது நிறவடையும் வரையில் கரோனா நிதியுதவி வழங்கவும், அரசு இல்லங்களில் முன்னுரிமை, கல்வி மற்றும் விடுதி செலவுகள் பட்டப் படிப்பு முடித்து வரும் வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பெற்றோரை இழந்துள்ள 9 குழந்தைகளுக்கு ரூ. 45 லட்சம் கரோனா நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.செல்வம், நன்னடத்தை அலுவலா் து.நித்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.