சொமேட்டோவை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!
சொமேட்டோவை தொடர்ந்து ஸ்விக்கியும் தன்னுடைய செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியது குறித்து...
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தனது போட்டி நிறுவனமான சொமேட்டோவை தொடர்ந்து தன்னுடைய செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளது.
முன்னதாக, மார்ச் 20 ஆம் தேதி சொமேட்டோ தனது பயன்பாட்டுக் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ரூ. 2.40 உயர்த்தி, ரூ. 14.90 ஆக நிர்ணயித்திருந்தது.
இந்த நிலையில், ஸ்விக்கியும் ஒரு ஆர்டருக்கு ரூ. 14.99 - லிருந்து ரூ.17.58 ஆக தனது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக இன்று அதன் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஸ்விக்கி கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியிருந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மீண்டும் இப்போது கட்டணத்தை உயர்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு ரூ. 2 ஆக அறிமுகப்படுத்தப்பட்ட கட்டணம் தற்போது ரூ.17.58 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Online Food delivery company Swiggy has followed its rival Zomato in increasing the usage fees of its app.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.