உணவு, நீர், கையில் பணம்!கோவிட் காலத்தைவிட கொடுமையானதாக மாறும் 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை
உணவு, நீர், கையில் பணத்தை சேமிக்க ! கோவிட் காலத்தைவிட கொடுமையானதாக மாறும் 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

கரோனா வைரஸ் பரவியதால் நேரிட்ட கோவிட் காலத்தைவிட மிகக் கொடுமையான ஆண்டாக 2027 மாறப்போகிறது, வீட்டில் உணவுப் பொருள்களை சேமித்து வைக்க செய்யறிவு ஆராய்ச்சியாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை வைரலாகியிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது, ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரோ, தன்னுடைய குடும்பத்துக்கு மிகவும் அபாயகரமான ஒரு எச்சரிக்கையை அனுப்பிக் கொண்டிருந்தார். அதில் 2027ஆம் ஆண்டில் எந்தவிதமான அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் கூறப்பட்டிருக்கலாம்.
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் உள்ள கடுமையான அபாயங்கள் குறித்து ஆராயும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான எம்இடிஆர் (METR) இன் தொழில்நுட்பப் பணியாளரான நிக்கோலா ஜுர்கோவிக், பல ஆண்டுகளாகத் தான் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கவலைப்பட்டு வருவதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, தன்னுடைய கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், காலம் கடந்துபோவதற்குள் இதுகுறித்துப் இப்போதாவது பேச வேண்டியது என்னுடைய கடமை என்பதை உணர்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்றி செலுத்தும் நாளில் குறிப்பிட விரும்புவது, நாம் அனைவரும் அடுத்த நன்றி செலுத்தும் நாளில் உயிரோடு இருப்போமா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது என்று நிக்கோலா ஜுர்கோவிக் எழுதியிருக்கிறார்.
சில நிறுவனங்களை ஹேக் செய்தது உள்பட, செய்யறிவு இந்த ஆண்டிலேயே மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இதுவரை நடந்தவை எல்லாம் நிதித்துறை சார்ந்தவை. அடுத்த ஆண்டு செய்யறிவால் பல உயிரிழப்புகள் நேரிடலாம்.
உலகின் தற்போதையை நிலையையே மோசமாக மாற்றக்கூடிய மூன்று வழிகளை அவர் சுட்டிக்காட்டினார்:
செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டை மீறிச் சென்று முக்கியமான உள்கட்டமைப்புகளுக்குள் ஊடுருவக்கூடும்;
தீய நோக்கமுடையவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கக்கூடும்;
அல்லது முக்கியத் தலைவர்கள் இயந்திரங்களிடம் அளவுக்கு அதிகமான அதிகாரத்தை ஒப்படைக்கக்கூடும் என்ற அவரது ஐயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உலகளவில் செய்யறிவுக்கு எதிராகக் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்படாலொழிய, தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும் ஸ்மார்ட் செய்யறிவுகள் மனிதகுலத்துக்கே ஆபத்தாக மாறும், அதுவும் 2027-ஆம் ஆண்டிலேயே அதேற்கான சாத்தியங்கள் உள்ளன என்கிறார்.
குடும்பங்களின் கல்வி மற்றும் தொழில் திட்டங்கள் பலவும் தடம்புரளும் அபாயம் உள்ளது, இளம் தம்பதியர் பலரும், தங்களது பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதே நடக்குமா? என்று கவலையடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
வீட்டில் எப்போதும் ஒரு சில வாரங்களுக்கான உணவுப்பொருள்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள், தண்ணீரை சேமித்துக் கொள்ளவும், வங்கிகள் முடங்கிவிட்டால் கையில் எப்போதும் ரொக்கமாகப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள், இது நிச்சயம் கோவிட் காலத்தைவிட மிக மோசமானதாக மாறக்கூடும் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பலரும் செய்யறிவு குறித்த ஆபாயங்களை விளக்கியிருந்தாலும், இவர் உணவு, தண்ணீர், கையில் காசு என்று நேரடியாக சொல்லியிருப்பது சற்றுக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.