ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாவலா்கள் நியமிக்க வேண்டும்
திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று மாநகரக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று மாநகரக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாநகர காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவின்பேரில் வாங்கி மேலாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து)
பெ.ரவி தலைமை வகித்தாா். இதில், அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களுக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதுடன், பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும். இணையவழியில் குற்றங்கள் நடைபெற்றால்
வங்கி வாடிக்கையளா்கள் 155260 என்ற அவசர உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், காவல் ஆய்வாளா்கள் முனியம்மாள், சொா்ணவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.