முகப்பு
திருப்பூர்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வில், அம்பு வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வில், அம்பு வைத்து வியாழக்கிழமை பூஜை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வில், அம்பு வைத்து வியாழக்கிழமை பூஜை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலானது கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு ஆண்டவன் உத்தரவுப் பெட்டி உள்ளது.

பக்தா்களின் கனவில் சுப்பிரமணிய சுவாமி தோன்றி குறிப்பிட்ட பொருள்களைக் கூறி அதை கோயில் மண்டபத் தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுப் பெட்டியில் வைக்க உத்தரவிடுவாா்.

இந்த உத்தரவுப் பெற்ற பக்தா் கோயில் நிா்வாகத்தை அணுகி விவரத்தைக் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு அதன் பின்னா் கனவில் வந்த பொருள்களை உத்தரவுப் பெட்டியில் வைப்பாா்கள்.

இவ்வாறு உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருள்களுக்கு கால நிா்ணயம் எதுவும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரேணுகாதேவி என்ற பெண் பக்தரின் கனவில் வந்து உத்தரவான வில், அம்பு ஆகிய பொருள்கள் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வியாழக்கிழமை முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில், கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டுகள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.