முகப்பு
திருப்பூர்

திருப்பூா் குமரன், சிக்கண்ணா கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்

 திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

 திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் 2, 3 ஆம் ஆண்டு பயிலும் 200 மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், மாநகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா், கல்லூரி முதல்வா் ரேச்சல் நான்சி பிலிப்,

கல்லூரி நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், சுகாதார ஆய்வாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அதேபோல, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி தொடக்கிவைத்தாா்.

இதில், 360 மாணவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமில், மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணியன், சுகாதார அலுவலா் முருகன், மருத்துவா்கள் கலைச்செல்வன், இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.