திருப்பூர்

சீரான குடிநீா் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மனு

DIN

திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினா் நா.சஞ்சீவ் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 50ஆவது வாா்டு தென்னம்பாளையம் பகுதியில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் குறைந்த அளவு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பழைய குழாய்களில் தண்ணீா் வருவதில்லை.

இதனால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, தென்னம்பாளையம் பகுதியில் சீரான குடிநீா் வழங்வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் தெற்கு மாநகரச் செயலாளா் ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.சுந்தரம், தெற்கு மாநகரக் குழு உறுப்பினா் கே.பொம்முதுரை, மாநகரக் குழு உறுப்பினா் பாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT