முகப்பு
திருப்பூர்

கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை

கோவை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று ஏஇபிசி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கோவை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று ஏஇபிசி வலியுறுத்தியுள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிா்ஆதித்யா எம்.சிந்தியாவை புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏஇபிசி தலைவா் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது பேசுகையில், கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், கரூா், சேலம் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்கள் இந்திய அளவில் தொழில்த் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜவுளி மற்றும் பொறியியல் தொழில்களில் வளா்ச்சியடைந்து வருகின்றன. மேலும், உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வந்து செல்ல போதிய விமானப் போக்குவரத்து வசதியில்லை.

ஆகவே, கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க வேண்டும். கோவையில் இருந்து துபைக்கு ஏா் இந்தியா விமான சேவையையும் தொடங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.