தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த 2005 ஆம் ஆண்டு
3,140 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக மாத ஊதியம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையே பெற்று, பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் அனைவரும் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள நிலையில் வாழ்ந்து வருகிறாா்கள்.எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களாக 16 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 3,140 தூய்மைப் பணியாளா்களுக்கும் அரசு விதிமுறைகளின் படி, கருணை அடிப்படையில் நிரந்தரப் பணி நியமனம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.